விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் இடம்பெறும் ‘நா ரெடி’ பாடலைக் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகு விரைவில் 12 மில்லியனைத் தாண்டியுள்ளது.
‘நா ரெடி’ விஜய்யின் பிறந்தநாளான ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) வெளியானது. சொந்தக் குரலில் இப்பாடலைப் பாடியிருக்கிறார் ‘தளபதி’.
பாடலில் விஜய்யின் துடிப்பான நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’வில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே இடம்பெற்றுள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இருக்கின்றனர்.
‘விக்ரம்’ படத்தின் மூலம் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனை அதிரடியாகக் களமிறக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இரண்டாவது முறையாக விஜய்யை இயக்குகிறார்.
2021ஆம் ஆண்டில் இருவரும் இணைந்த ‘மாஸ்டர்’ வெளியானது.

