சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார் நடிகை மாளவிகா மோகனன். விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பார்வையாளர்களை ரசிகர்களாக உருமாற்றினார்.
தற்போது பா. ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் மாளவிகா. அதில் தனது கதாபாத்திரத்துக்காக தினமும் நான்கிலிருந்து ஐந்து மணிநேரத்துக்கு ஒப்பனை செய்துகொள்ளவேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தனை நேரம் அமைதியாக உட்கார்ந்திருப்பது பெரும் சவாலாய் இருப்பதாக இவர் கூறுகிறார்.
‘தங்கலான்’ படத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப் பெண் போல வேடம் பூண்டுள்ளார் மாளவிகா. இப்படத்தின் கதாநாயகன், விக்ரம்.


