‘டூப்’ போடாமல் காயமுற்ற கல்யாணி பிரியதர்ஷன்

1 mins read
91667cf5-b7c7-47c1-a705-c37b2616ff6e
கல்யாணி பிரியதர்ஷன். - படம்: இணையம்

சண்டைக் காட்சியில் ‘டூப்’ போடாமல் நடித்தபோது காயமுற்றார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். ‘ஆன்டனி’ என்ற மலையாளப் படத்தில் இவர் நடித்துக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

கல்யாணியின் கையில் காயம் ஏற்பட்டது. இதைப் பற்றிக் காணொளி வெளியிட்ட இவர், “சண்டைக் காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல,” எனக் கூறினார்.

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’, சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் நடித்துப் பெயர் எடுத்த கல்யாணி பிரியதர்ஷன், மலையாளப் படங்களிலும் அசத்தியவர். பிரபல இயக்குநர் பிரியதர்ஷன், அவரின் முன்னாள் மனைவி லிஸி ஆகியோரின் மகள் கல்யாணி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்