நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். பத்துக்கு மேற்பட்ட தோற்றங்களில் சூர்யா நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ‘கேஜிஎஃப்’ படத்தில் வில்லனாக நடித்த அவினாஷ் இந்த ‘கங்குவா’ படத்தில் இணைந்திருக்கிறார். இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் சரித்திரக்கால பகுதியில் அவினாஷ் வில்லனாக நடிப்பதாகவும் அவரது வில்லன் தோற்றம் ‘கேஜிஎஃப்’ படத்தைவிட மிரட்டலாக இருக்கும் என்றும் ‘கங்குவா’ பட வட்டாரங்களில் கூறப்படுகிறது.