நடிகை ஜோதிகா அவ்வப்போது வெளியிடும் உடற்பயிற்சி காணொளிகளுக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது குடும்பத்துடன் மும்பையில் வீடு வாங்கி குடியேறியிருக்கும் ஜோதிகா பாலிவுட் திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அண்மையில் அவர் 352 கிலோ எடையை தாங்கும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
44 வயதில் திடகாத்திரமான உடலமைப்புடன் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவருக்கு இணையவாசிகளும் பிரபலங்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.