தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகிலேயே போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக நடிகர் கார்த்தி கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறை சார்பாக நடைபெற்ற போதைப் பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,
போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் இளையர்களின் வயது வரம்பு குறைந்துகொண்டே வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளையர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.
“போதைப்பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அதனை விற்பவர்கள் எல்லாருமே நம்மிடையே இருப்பவர்கள்தான். நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருள்களின் பயன்பாட்டை தடுத்து மாற்றத்தை கொண்டு வர முடியும்,” என்றார் கார்த்தி.