பதிலடி கொடுத்த ஹன்சிகா

பதிலடி கொடுத்த ஹன்சிகா

1 mins read
c7a70243-9144-4c35-ba90-8c23fba79fa4
ஹன்சிகா - படம்: ஊடகம்

அறுவை சிகிச்சை மூலம் தமது உடல் எடையைக் குறைத்து புதுப்பொலிவுடன் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார் ஹன்சிகா.

கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விஷயத்தில் நான் எனக்காக பேசுகிறேன். இந்த உடல் தோற்றத்துக்கு மாற நான் கடுமையாக உழைத்து இருக்கிறேன். அதில் யோகாவும் அடங்கும். மேலும் யோகா வெறுப்புகளுக்கு பதிலாக நேர்மறை விஷயங்களை பரப்புவதற்கும் உதவும்,” என்று சமூக ஊடகத்தில் ஹன்சிகா பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அனைத்துலக யோகா தினத்தையொட்டி, தாம் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் ஹன்சிகா.

அவற்றைக் கண்ட ரசிகர் ஒருவர், சில நடிகைகள் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையைக் குறைத்த பிறகு, யோகா மூலம் பலன் அடைந்ததாகப் பொய் சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் ஹன்சிகா.

மேலும் பெண்களைப் பார்த்து உருவக்கேலி செய்வதை ஆண்கள் நிறுத்த வேண்டும் என்றும் தமது சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்