தமது தந்தையும் நடிகருமான ரோபோ சங்கருக்கு மதுப் பழக்கம் இருந்ததாகவும் தற்போது அதிலிருந்நது முழுமையாக விடுபட்டுவிட்டதாகவும் அவரது மகள் இந்திரஜா தெரிவித்துள்ளார்.
அண்மைய பேட்டி ஒன்றில், மதுப்பழக்கம் முன்அறிகுறிகள் ஏதுமின்றி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்றும் இளையர்கள் மதுவைத் தொட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் வெகுவாக உடல் மெலிந்து காட்சியளிக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனால் அவர் நோய்வாய்ப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
ரசிகர்கள் இதுதொடர்பாக பல்வேறு தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தனது தந்தை பல மாதங்களாக அளவுக்கு மீறி மது அருந்தியதாகவும் அதனால் அவர் உடல்நிலை மோசமடைந்தது என்றும் மகள் இந்திரஜா தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே எனது அப்பா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.
“மதுவுக்கு அடிமையானதால்தான் அப்பாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. எனினும் இப்போது மதுப்பழக்கத்தில் இருந்து அவர் முழுமையாக மீண்டுவிட்டார்.
“அப்பா இப்போது புது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மது, புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களை இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டும்,” என நடிகையுமான இந்திரஜா கேட்டுக்கொண்டுள்ளார்.


