வில்லனாக மாறிய கமல்: ரூ.150 கோடி சம்பளம்

வில்லனாக மாறிய கமல்: ரூ.150 கோடி சம்பளம்

2 mins read
19f6a63f-2c20-446b-8984-7992e63cde50
கமல், அமிதாப், தீபிகா, பிரபாஸ். - படம்: ஊடகம்

‘விக்ரம்’ படம் வெளியான பின்னர் கமல்ஹாசனின் ஊதியம் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இந்நிலையில் ‘பாகுபலி’ பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் இந்திய அளவில் பேசப்படும் படமாக ‘புராஜெக்ட் கே’ உருவெடுத்து வருகிறது.

பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘ஆதிபுருஷ்’ படம் விமர்சன ரீதியில் பின்னடைவைச் சந்தித்தது.

இந்நிலையில் ‘புராஜெக்ட் கே’ படத்தில் நடித்து வருகிறார். இது நாக் அஸ்வின் இயக்கும் படம். ‘நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நாக் அஸ்வின்.

‘புராஜெக்ட் கே’ படத்துக்குசந்தோஷ் நாராயணன் இசையமைப்பது உறுதியாகி உள்ளது.

இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், தீஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பதை தயாரிப்புத் தரப்பான வைஜெயந்தி மூவிஸ் உறுதி செய்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால் பிரபாசுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்துக்கு யாரைத் தேர்வு செய்வது என்பது தொடர்பாக நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் முடிவில் கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். அவருக்கு ரூ.150 கோடி ஊதியம் தரப்படுகிறது. இத்தகவல் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் தற்காலிமாக ‘புராஜெக்ட் கே’ என்று குறிப்பிடப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்