தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நூறு மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாடல்

1 mins read
1d9ffa6b-3bb7-4f44-85e1-d09d1ae25a49
தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா. - படம்: ஊடகம்

‘தர்மதுரை’ படத்தில் இடம்பெற்ற ‘ஆண்டிப்பட்டி கணவாக் காத்து’ என்ற பாடல் யூடியூப் தளத்தில் நூறு மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் இது. கடந்த 2016ல் வெளியீடு கண்டது.

தனுஷ் நடித்த ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரவுடி பேபி’ என்ற பாடல்தான் யூடியூப்பில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள தமிழ் சினிமாப் பாடலாகும்.

இதுவரை 100 மில்லியனுக்கும் மேலான பார்வைகளைக் கடந்துள்ள பாடல்களின் பட்டியலில் ‘ரவுடி பேபி’, ‘என்ஜிகே’ படத்தில் இடம் பெற்ற ‘ அன்பே பேரன்பே’ பாடல், ‘டிக்கிலோனா’ படத்தில் இடம் பெற்ற ‘பேரு வச்சாலும்’ பாடல் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. இப்போது ‘ஆண்டிப்பட்டி கணவாக் காத்து’ பாடல் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்