விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியபோது அழகாக இல்லை என்று தம்மை சிலர் கேலி செய்ததாகச் சொல்கிறார் சோபிதா துலிபாலா.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள இவர், திரையுலகில் இன்றுள்ள நிலையை எட்டிப்பிடிக்க பல்வேறு தடைகளை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டு கொஞ்சம் கூட அழகாக இல்லையே என நானே வருத்தப்பட்டுள்ளேன். ஆனால் நம்பிக்கை இழக்காமல் நடிப்புத் தேர்வில் பங்கேற்பேன். உழைப்பு, இடைவிடாத முயற்சி. தன்னம்பிக்கையால் சாதித்தேன்,” என்கிறார் சோபிதா துலிபாலா.


