தற்போது ஹிந்தியில் உத்ரா படத்தில் ‘ஆக்ஷன்’ கதையில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தமிழில் விக்ரமுடன் நடித்து வரும் தங்கலான் படத்திலும் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘தங்கலான்’ படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ரோலிங், ஜம்ப்ஸ், கிக்ஸ் என பல கலைகளை கற்று நடித்து வருவதோடு, சிலம்பாட்டத்தை மையமாகக் கொண்ட அதிரடி சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறேன்.
‘அது, என்னை பாலிவுட் வரை பேசவைக்கும். அந்த வகையில் இதுவரை கவர்ச்சி நாயகியாக என்னைப் பார்த்து வந்த திரையுலகின் கண்ணோட்டம் இனிமேல் மாறப் போகிறது என்கிறார் மாளவிகா.

