விஜய் படம்: வெற்றிமாறன் தகவல்

விஜய் படம்: வெற்றிமாறன் தகவல்

1 mins read
69d8452e-a211-463d-886b-da0db4ff2a71
‘விடுதலை’ படப்பிடிப்பின்போது சூரி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தாம் விஜய்யை வைத்து படம் இயக்கப்போவது உறுதி என்கிறார் வெற்றிமாறன்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து கடந்த இரு தினங்களாக விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் வெற்றிமாறனைப் புகழ்ந்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றிமாறனிடம் விஜய்யை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், ’விடுதலை 2’, ‘வாடிவாசல்’ படங்களுக்குப் பிறகு விஜய் படத்துக்கான பணிகளை தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யிடம் ஓராண்டுக்கு முன்பே வெற்றிமாறன் ஒரு கதையை விவரித்திருந்ததாகவும் அதில் சில மாற்றங்களைச் செய்துவிட்டால் தாம் நடிக்கத் தயார் என்று விஜய் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

எனவே, 2025ஆம் ஆண்டு விஜய், வெற்றிமாறன் கூட்டணி அமையும் என்பது உறுதி என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்