ஆஸ்கர் நடுவர் குழுவில் மணிரத்னம்

ஆஸ்கர் நடுவர் குழுவில் மணிரத்னம்

1 mins read
151fc48b-3a64-4ac6-8c7c-dd4d3c88d159
மணிரத்னம். - படம்: ஊடகம்

ஆஸ்கர் விருதுக்குரிய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கான குழுவில் இயக்குநர் மணிரத்னமும் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் விருதுக்குரிய படைப்புகளை தேர்வு செய்யும் பொருட்டு, புதிய நடுவர் குழுவை அறிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான நடுவர் குழுவுக்கு புதிதாக 398 பேர் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இந்தியாவில் இருந்து, மணிரத்னம் தவிர, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

ஏற்கெனவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருதுக்குரிய படங்களைத் தேர்வு செய்வதற்கு மணிரத்னம் போன்ற படைப்பாளிகள்தான் பொருத்தமானவர்கள் என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்