திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
c3260456-cb95-439d-8bf0-d8eb6b68ad9f
தன் காலில் விழுந்த ரசிகரை உடனே எழுப்பி கட்டியணைத்து கண்ணீருடன் நன்றி, நன்றி என்று கூறி நெகிழ்ந்தார் தமன்னா. - படம்: ஊடகம்
பிரித்விராஜ்
பிரித்விராஜ் - படம்: ஊடகம்
பிரபாஸ்
பிரபாஸ் - படம்: ஊடகம்

காலில் விழுந்த ரசிகர்: கண்கலங்கிய தமன்னா

நடிகை தமன்னா மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். ரசிகர்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர்.

ஒரு ரசிகர் மட்டும் தமன்னாவின் காலில் விழுந்தார். இதை தமன்னா எதிர்பார்க்கவில்லை. பின்னர் அவருக்குப் பூங்கொத்து கொடுத்த அவர், தமன்னாவின் முகத்தை கையில் பச்சை குத்தியிருந்ததைக் காண்பித்தார்.

அதைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய தமன்னா, அவர் கொடுத்த பூங்கொத்தையும் கடிதத்தையும் பெற்றுக்கொண்டு நன்றி கூறி நெகிழ்ந்தார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“வலியுடன் போராடி மீண்டு வருவேன்”

கொச்சியில் உள்ள மறையூர் பகுதியில் படப்பிடிப்பின்போது பிருத்விராஜின் காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து பிரித்விராஜுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “விலாயத் புத்தா’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளின் போது ஏற்பட்ட விபத்தில் காலில் பலத்த காயமடைந்தேன். அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருகிறேன்.

இரண்டு மாதங்களுக்கு ஓய்வுடன் பிசியோதெரஃபி சிகிச்சை மேற்கொள்ள உள்ளேன். இந்த வலியுடன் போராடி விரைவில் குணமடைந்து மீண்டு வருவேன் ,” என்று பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் சொகுசு பங்களா வாங்கினார் பிரபாஸ்

பிரபாஸ் ஒரு படத்தில் நடிப்பதற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். திரைப்படங்கள் மூலம் தான் சம்பாதித்த பணத்தில் பல நாடுகளிலும் அசையா சொத்துகளை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இத்தாலி நாட்டில் பல கோடி ரூபாய் செலவில் சொகுசுப் பங்களாவை வாங்கியுள்ள அவர், படப்பிடிப்பு இல்லாதபோது தனது நண்பர்களுடன் இத்தாலிக்குச் சென்று சொகுசு பங்களாவில் ஓய்வெடுக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அத்துடன், இந்தப் பங்களாவை இத்தாலிக்கு வரும் சுற்றுப்பயணிகள், இத்தாலியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வாடகைக்கு விடுவதாகவும் இதன்மூலம் பிரபாசுக்கு மாத வாடகையாக 40 லட்சம் ரூபாய் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

‘கதாநாயகியானது அதிர்ஷ்டம்’

தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா, “ஒரு நடிகையாக எனது சினிமா வாழ்க்கை பயணம் திருப்தியாக இருக்கிறது. நான் கதாநாயகி ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை. பொறியாளர் பணிக்குப் படித்தேன். சினிமாவில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து கதாநாயகி ஆகி இருக்கிறேன். இதை அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். இந்தப் பயணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்