தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து மணி நேர ஒப்பனை; மிரட்டப் போகும் விக்ரம்

1 mins read
91e7be83-e27b-4aa5-a558-6ddc446f9042
‘தங்கலான்’ படப்பிடிப்பில் விக்ரம். - படம்: ஊடகம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம், கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப் குறித்த கதை என்று பா. ரஞ்சித் கூறியிருந்தார். இதன் காரணமாகவே மக்களிடையே இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்துக்காக நாள்தோறும் ஐந்து மணி நேரத்தை ஒப்பனைக்காகவே செலவிடுகிறார் விக்ரம். அண்மையில் இது தொடர்பான புகைப்படங்களை படத்தின் நாயகி மாளவிகா மோகனன் வெளியிட்டிருந்தார்.

படப்பிடிப்பின்போது விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் தங்கலான் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் ஓரிரு நாள்களில் மதுரையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இதற்கிடையே, மூக்கில் காயம் ஏற்பட்டது போன்ற ஒப்பனையுடன் நடித்து வருகிறார் விக்ரம். மேலும் அடையாளம் தெரியாத அளவுக்கு தாடி, மீசையோடு கன்னம் எல்லாம் சுருங்கி, அச்சமூட்டும் தோற்றத்தில் நடிக்கிறாராம். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

அவற்றைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். கமலுக்கு அடுத்தபடியாக தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக இந்த அளவுக்கு மெனக்கெடும் ஒரே நடிகர் விக்ரம்தான் என்று பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் வசூல் ரீதியில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் ‘தங்கலான்’ அந்த ஏக்கத்தைப் போக்கும் என நம்புவதாகச் சொல்கிறார் விக்ரம். ரசிகர் களும் அந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்