‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது ஒரு திரைப்படக் கல்லூரிக்குப் போய் வந்த உணர்வையும் அனுபவத்தையும் தந்ததாகச் சொல்கிறார் விக்ரம் பிரபு.
மேலும், வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அளித்திருப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் பிரபு நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளபோதிலும், இந்தப் படம் தமக்கு மிகுந்த மனநிறைவை அளித்திருப்பதாகச் சொல்கிறார்.
“மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிக்கும்போது ஏராளமான நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடியும். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமும் இதை ஒப்புக்கொள்ளும்.
“பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த பிறகு ஒருவித பக்குவநிலையை எட்டியுள்ளதாக உணர்கிறேன். ஒரு கதாபாத்திரத்துக்காக என்ன செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்பது தொடர்பான புரிதல் அதிகரித்துள்ளது,” என்கிறார் விக்ரம் பிரபு.
இதற்கு முன்பு தாம் நடித்த ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகக் குறிப்பிடுபவர், தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படம் பல்வேறு பாடங்களைக் கற்றுத் தந்ததாகச் சொல்கிறார்.
“அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகள் அமையும் என நம்புகிறேன். ‘டாணாக்காரன்’ படக்குழுவுடன் மீண்டும் இணைகிறேன். மேலும், இயக்குநர் முத்தையாவுக்கும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளேன்.”
வாணி போஜனுடன் இணைந்து நடித்திருப்பது குறித்து?
தொடர்புடைய செய்திகள்
“மிகுந்த திறமைசாலி. ஒரு கதாநாயகியாக தன்னை எவ்வாறு திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ள நடிகை. அவரால் எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும்,” என்கிறார் விக்ரம் பிரபு.


