இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரலாற்றுப் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பிரியங்கா அருள் மோகன் நாயகியாகவும், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர். அதை தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ‘மரியாதை என்பது சுதந்திரம்’ என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

