பூஜா ஹெக்டே: எனது எதிர்பார்ப்பு தவறாகிப்போனது

பூஜா ஹெக்டே: எனது எதிர்பார்ப்பு தவறாகிப்போனது

1 mins read
a789a791-e96a-42f8-9263-2fca7db53e6b
பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

திரையுலகில் வெற்றி, தோல்வி என்பது இயல்பாக நடக்கக்கூடியது என்கிறார் பூஜா ஹெக்டே.

எனினும் எதையுமே முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறார்.

”சில கதைகளைக் கேட்கும்போது அற்புதமாக தோன்றும். ஆனால் திரையில் பார்க்கும்போது சப்பென்று ஆகிவிடும். அதே சமயத்தில் சாதாரணமாகத் தோன்றிய கதைகள் வெற்றி பெற்றுள்ளன. எனவே வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படக் கூடாது.

“நான் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்த ‘மொகஞ்சதாரோ’ கதையை கேட்டு மிகவும் வியந்து போனேன். இந்தி சினிமா வாழ்க்கை ஆரம்பமே மிகச்சிறப்பாக இருக்கிறது என நினைத்தேன். ஆனால் அந்தப் படம் நன்றாக போகவில்லை. என் எதிர்பார்ப்பு தவறாகிவிட்டது,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பூஜா.

கதை பிடித்திருந்தால் நடிப்பது மட்டுமே நடிகைகளின் வேலை என்றும் வெற்றி தோல்வி என்பது அவர்களுடைய எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்கிறார் பூஜா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்