உருவாகிறது இந்தியன் 3: கமலுடன் இணையும் உதயநிதி

1 mins read
e7d23757-8b90-4891-937a-cd45b1f11582
‘இந்தியன் 2’ படத்தில் கமல். - படம்: ஊடகம்

‘இந்தியன்’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சங்கர். அடுத்த மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் படம் அடுத்த ஆண்டுதான் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ வெளியான கையோடு அதன் மூன்றாம் பாகத்துக்கான வேலைகளைத் தொடங்க சங்கர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

“’இந்தியன்’ மூன்றாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன,” என்று நடிகர் உதயநிதி அண்மையில் கூறியிருந்தார். அவரது சொந்தப் பட நிறுவனம்தான் மூன்றாம் பாகத்தை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் கமல். ‘இந்தியன் 2’ படம் வெளியானதும் வினோத் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ள அவர், ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்