முத்தக் காட்சியில் நடிப்பது தன் கணவருக்கு அறவே பிடிக்காது என்பதால் அவ்வாறு நடிப்பதைத் தவிர்த்து வருவதாகச் சொல்கிறார் நடிகை பிரியாமணி.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பே அது குறித்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் தெரிவித்து விடுவதாகச் சொல்கிறார்.
“கடந்த சில ஆண்டுகளாகவே நான் முத்தக் காட்சிகளில் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சிகளில் நடிக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டேன்.
“திரையில் தெரிவது ஒரு கதாபாத்திரம்தான் என்ற போதிலும், ஒரு பெண்ணாக அவ்வாறு நடிக்க சிரமப்படுவேன்,” என்கிறார் பிரியாமணி.
தாம் நடித்த படங்களை தமது குடும்பத்தினரும் பார்ப்பார்கள் என்பதால் முத்தக் காட்சியில் நடித்து அவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வணிகப் படங்கள் மட்டுமல்லாமல், விருதுக்குரிய படைப்புகளிலும் நடிக்க விரும்புவதாக அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.


