இயக்குநர் ராஜமௌலி நடிகராக மாறியுள்ளார்.
மிக விரைவில் முன்னணி நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் அவரைக் காண முடியும்.
உலக அளவில் நன்கு அறியப்பட்ட இயக்குநராக மாறியுள்ள ராஜமௌலி, அடுத்து மகாபாரதத்தை சில பாகங்களாக இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபல நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்கக் கேட்டு அவரை அணுகி உள்ளனர். முதலில் மறுத்த அவர், இறுதியில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
விரைவில் ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது குறித்து ராஜமௌலி தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர் அடுத்த பட வேலைகளை கவனிப்பதாகக் கூறப்படுகிறது.


