நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘ஜெயிலர்’.
இந்தப் படத்தில் மலையாள உச்ச நட்சத்திரம் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரெடின் கிங்ஸ்லி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சென்னை, எண்ணூர், கடலூர், ஹைதராபாத், ராஜஸ்தான், மங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
அதனைப் படக்குழு ‘கேக்’ வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை அண்மையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில், ‘ஜெயிலர்’ முதல் பாடலின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அப்பாடல் தமன்னா நடனமாடும் பாடலாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். முழுப் பாடலும் இம்மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என்று அந்த முன்னோட்டக் காணொளி வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


