‘அகிலன்’, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, ‘இறைவன்’, ‘ஜெஆர் 30’ மற்றும் ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32வது படம் ‘ஜெனி’. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.
மகேஷ் முத்துசெல்வன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தை அர்ஜுனன் இயக்குகிறார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியுள்ளது.