தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படவேலை தொடங்கும் முன்பே ரூ.125 கோடிக்கு விற்பனையான கமல் படம்

2 mins read
d73684f7-8551-43a3-9d42-412e38a9979a
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது கமலின் 233வது படத்தின் விளம்பரம். இப்படத்தில் வேலைகள் தொடங்கும் முன்பே ஓடிடி உரிமை பல கோடிகள் விற்பனையாகியுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் வசூல் நாயகனாக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.

அஜித், விஜய் போன்ற முன்னணி நாயகர்களுக்குப் போட்டியாக தற்போது கமலிடம் கைவசம் நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன், சிம்பு படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார்.

இந்தியன் 2: கமலஹாசன், சங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியீடு காண்கிறது. சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக் போன்ற பல நட்சத்திரங்களோடு உருவான இந்த படத்தின் 25% வேலைகள் மட்டுமே இன்னும் நிலுவையில் இருக்கிறது.

வாய் பிளக்க வைத்த ‘புரொஜெக்ட் கே’

‘புரொஜெக்ட் கே: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் ‘புரொஜெக்ட் கே’ படத்தில் கமலஹாசன் எதிர்மறை பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் கமலுக்கு பல வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய காத்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் கமல் 21 வேடங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

233வது படத்தின் இயக்குநர்

அஜித்குமாரின் ஆஸ்தான இயக்குநரான எச் வினோத்துடன் கமலஹாசன் தன்னுடைய 233வது படத்தில் இணைய இருப்பது தற்போது அதிகாரபூர்வமாக உறுதியாக இருக்கிறது. பட வேலை துவங்கும் முன்பே இப்படம் ரூ.125 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தை தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் கமல். கையில் தீப்பந்தத்துடன் ‘ரைஸ் டு ரூல்’ என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்தப் படம் விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ‘ரைஸ் டு ரூல்’ என்ற வரிகளும் விளம்பரக் காணொளியும் இப்படம், கமலின் அரசியல் அதிரடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் கதையை கமல்ஹாசனும் எச் வினோத்தும் இணைந்து எழுதியுள்ளார்களாம். ராஜ்கமல் பிலிம்சின் 52வது படமாக உருவாகும் KH 233 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் வினித்தும் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

பிரம்மாண்டமான 234வது படம்

கமலின் 234வது படத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சிம்பும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்