தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைத்துளிகள்

2 mins read
736cdd0e-8852-4839-9462-a9b8152caf3d
சாண்டி நடிக்கும் கிஃப்ட் - இந்திய ஊடகம்
multi-img1 of 2
தளபதி ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன்
தளபதி ரஜினி ஸ்டைலில் சிவகார்த்திகேயன் - இந்திய ஊடகம்
மிரளவைக்கும் திகில் காட்சிகளுடன் சப்தம்
மிரளவைக்கும் திகில் காட்சிகளுடன் சப்தம் - இந்திய ஊடகம்

ரஜினி பாணியில் சிவகார்த்திகேயன்

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் தளபதி ரஜினியைப் போல சிவகார்த்திகேயன் தோற்றமளிக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கிலும் ‘மாவீருடு’ என்று பெயரில் தயாராகி உள்ளது. இப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக நீருக்கடியில் படமாக்கப்பட்ட காட்சிக்காக சிவகார்த்திகேயன் ஒரு நாள் முழுவதும் பயிற்சி எடுத்துக்கொண்டாராம்.

மேலும், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பிரபல நடிகர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது  ரஜினியாக இருக்கும் என பலர் சமூக வலைதளங்களில் கருத்திட்டு வந்தனர். ஆனால், அவர் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அந்தம் பிரபலம் பற்றி ரகசியத்தை காப்பாற்றி வருகின்றனர் படக்குழுவினர்.

மிரளவைக்கும் பேய்ப் படம்

ஈரம் படத்தின் மூலம் வித்தியாசமான திகில் அனுபவத்தை கொடுத்த இயக்குனர் அறிவழகன் அடுத்து இயக்கவுள்ள படம் ‘சப்தம்’. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களின் சப்த நாடியையும் ஒடுக்கும் அளவுக்குத் திகிலாக எடுக்கப்பட உள்ளது. ஈரம் படத்தில் தண்ணீர் மூலம் பயத்தை காட்டிய இவர், இதில் சத்தம் மூலம் மிரளவிட இருக்கிறார். சப்தம் படம் உறுதியாக ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து மிரள வைக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். ஆதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை 7G ஃபிலிம்ஸ், ஆல்பா ஃப்ரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விவேகா பாடல்களை எழுதுகிறார். தமன் இசை அமைக்கிறார்.

அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார்

‘தாதா 87’, ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி ‘ஹரா’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார் வனிதா விஜயகுமார். மேலும் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

சாண்டி படத்தில் இளையராஜா

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடன இயக்குநர் சாண்டி நாயகனாக நடிக்கும் ’கிப்ட்’ படத்தில் இரு திரை உலக மேதைகள் இணைந்துள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். அவர் ஏற்கெனவே ஏழு பாடல்களுக்கு இசையமைத்து விட்டதாக கூறப்படுகிறது. அல்போன்ஸ் புத்திரன் இயக்க உள்ளார். முக்கிய பாத்திரத்தில் கோவை சரளா நடிக்க உள்ளார். சகானா சர்வேஷ், மகாலட்சுமி, சுதர்சன், சம்பத்ராஜ், ராகுல், சார்லி, சைக்கிள் மணி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்