தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சோபிதாவை பிரிந்த நாக சைதன்யா

2 mins read
10ead63e-1d62-4b2e-b061-bac4d0fbb8b5
சோபிதாவும் நாக சைதன்யாவும் சுற்றுலா சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படம். - இந்திய ஊடகம்

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதற்கு காரணமே நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதல் கொண்டதுதான் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நடிகை சோபிதா துலிபாலாவையும் நாக சைதன்யா கழட்டி விட்டுவிட்டதாக தகவல்கள் தெலுங்குத் திரையுலகில் பரவி வருகிறது.

தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா, தனது முதல் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்தார்.

இருவருக்கும் 2017ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து நான்கு ஆண்டுகளில் 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

அண்மையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நாக சைதன்யாவுக்கு அந்த படம் பெரிதாக ஓடவில்லை.

நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் அதன் காரணமாகத்தான் சமந்தாவை நாக சைதன்யா பிரிந்தார் என்றும் பேச்சுகள் அடிபட்டன.

மேலும், தன் தந்தையைப் போலவே நாக சைதன்யாவும் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என பேச்சுகள் அடிபட்டன.

தற்போது இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் அண்மைக்காலமாக இருவரையும் ஒன்றாகப் பார்க்க முடியவில்லை என்றும் இருவரும் பேசிக்கொள்வதுகூட இல்லை எனவும் தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இதுவரை இதுதொடர்பாக இருவரும் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி