நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் சண்டைக்காட்சிகள் ‘கேஜிஎஃப்’ தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தனுஷ் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சுடுவதைப்போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. முதல் பார்வை சுவரொட்டி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் முன்னோட்டக் காணொளி அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
அதேநேரத்தில் தனது 50வது படத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இப்படத்தை அவரே இயக்கவுள்ளார். பவர் பாண்டிக்குப் பிறகு தனுஷ் இயக்கும் படம் இது.
இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, அமலா பால் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை பூசையுடன் தொடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

