தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைத்துளிகள்

2 mins read
dc24ba82-d9f9-435b-a7b4-a7e58b09bd1f
அதிதி சங்கர். - படம்: ஊடகம்
multi-img1 of 4

# திரிஷா தற்போது நடித்து வரும் ‘தி ரோட்’ திரைப்படம் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது. திகில், சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் படப்பிடிப்பின்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகச் சொல்கிறார் திரிஷா.

ஆகஸ்ட் மாதம் படம் வெளியீடு காண உள்ள நிலையில், ஜூலை மாதம் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார் திரிஷா.

மிக விரைவில் இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகும் என்றும் திரிஷாவின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு படத்தின் வெற்றிக்கு துணை நிற்கும் என நம்புவதாகவும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

# ‘விருமன்’, ‘மாவீரன்’ ஆகிய படங்களை அடுத்து, விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் அதிதி சங்கர்.

இப்படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார்.

முதல்முறையாக இந்தப் படத்தில் நவநாகரிக நகரத்துப் பெண்ணாக நடிக்கிறார் அதிதி. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வது உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார் அதிதி.

# அருள்நிதியின் புதிய படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கெனவே ‘பவர் பாண்டி’, ‘ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மடோனா. இந்நிலையில், அறிமுக இயக்குநர் விஜய் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் அருள்நிதி. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி உள்ளது. இதில் மடோனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இம்மாத இறுதிக்குள் முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளதாக கூறுகிறார் மடோனா.

தொடர்புடைய செய்திகள்

# சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது. ‘எமனே தப்பு செய்தாலும் தட்டிக் கேட்பேன்’ என்று சிவகார்த்தி கேயன் பேசும் வசனம் இடம்பெற்றுள்ள இந்த முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் நிச்சயம் நூறு கோடி ரூபாய் வசூல் பெற்று சாதிக்கும் என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் நம்புகின்றனர். இதையடுத்து முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அருமை என சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். திட்டமிட்டபடி படம் வெளியீடு காண்பது சிவகார்த்திகேயனையும் உற்சாகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னோட்டக் காட்சித்தொகுப்பு சிறப்பாக இருப்பதாக படத்தின் இயக்குநரை அவர் பாராட்டி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி