புதிதாக உருவாகும் தெலுங்குப் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. ‘ ஸ்பை’ என்ற தெலுங்குப் பத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர். அதன் காரணமாக அவருக்குப் புதுப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இந்நிலையில் பவன் கல்யாண் படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா நடிக்க உள்ளார். மற்றொரு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

