மலையாளத்தில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்ற மனக்குறை திரிஷாவுக்கு உள்ளது.
இந்நிலையில் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் திரிஷா.
மலையாள முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் ‘ஐடென்டி’ மலையாளப் படத்தில் திரிஷாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நல்ல கதாபாத்திரம் என்பதால் தனது சம்பளத்தை ஓரளவு குறைத்துக்கொண்டு திரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல். இப்படத்தில் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியை அடுத்து, திரிஷாவுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.


