தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்கில் ‘மாமன்னன்’

1 mins read
5af5730b-4230-450b-a3cc-86988a8e836c
மாமன்னன். படம்: தமிழக ஊடகம் -

‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தெலுங்கு மொழி வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் வெற்றிையத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் ‘நாயகுடு’ என்ற பெயரில் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்