பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் விக்ரம். மேலும், படப்பிடிப்புத் தளத்தில் ரஞ்சித், அமலா பாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
“படப்பிடிப்பு நிறைவடைந்தது. அற்புதமான சிலருடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களைப் பெற்றேன். மொத்தம் 118 நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்தக் கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித்,” என்று பதிவிட்டுள்ளார் விக்ரம்.
‘தங்கலான்’ படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.