‘தரமணி’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வசந்த் ரவி, அடுத்து சபரீஷ் நந்தா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசாடா நடிக்கிறார்.
இவர் ஏற்கெனவே ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர்.
இவரைத் தவிர ‘விஸ்வாசம்’ படத்தின் அஜித் மகளாக நடித்திருந்த அனிகா சுரேந்திரனும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
வித்தியாசமான கதைக் களங்கள், கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது கொள்கை என்கிறார் நடிகர் வசந்த் ரவி.