‘மாமன்னன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வடிவேலுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
‘லைப் இஸ் பியூட்டிபுல்’ என்ற இத்தாலியன் படத்தை மறுபதிப்பு அவர் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதில் தம்மை நாயகனாக நடிக்க வைக்க மாரி செல்வராஜ் விரும்புவதாக பேட்டி ஒன்றில் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.
“அந்த இத்தாலிய மொழிப் படத்தை நானும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மாரி செல்வராஜ் மீண்டும் திரையில் என்னை வித்தியாசமான் தோற்றத்தில் நடிக்க வைப்பார் என நம்புகிறேன்,” என்கிறார் வடிவேலு.
‘மாமன்னன்’ படம் வசூலில் அசத்தி வருகிறது. இப்படத்தில் வடிவேலுவின் நடிப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர். எனவே மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்கி உள்ளார்.

