ரசிகர்களைக் கவர்ந்த ‘டிமான்ட்டி காலனி’ காணொளி

1 mins read
4739e8ef-e5c1-49ea-9dc8-1a83227e4bdf
டிமான்டி காலனி 2 படத்தில் அருள்நிதி, பிரியா. - படம்: ஊடகம்

அருள்நிதியின் படங்கள் என்றால் வித்தியாசமான கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிறார் அருள்நிதி.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது ‘டிமான்ட்டி காலனி’.

தற்போது இரண்டாம் பாகத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் உருவானது தொடர்பாகச் சிறப்பு காணொளி வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் இப்படம் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சிறப்புக் காணொளி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்