தமது 48ஆவது படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இதையடுத்து படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. கதைப்படி நாயகன், வில்லன் இரண்டுமே அவர்தானாம்.
இதற்காக அவர் தனது உடல் எடையை மீண்டும் அதிகரிக்க உள்ளதாகத் தகவல்.

