50 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய் படப் பாடல்

50 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய் படப் பாடல்

1 mins read
8813b3f1-d552-4aa3-88a2-99038a22fb83
விஜய். - படம்: ஊடகம்

அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தின் பாடலை இதுவரை லட்சக்கணக்கானோர் இணையத்தில் பார்த்துள்ளதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் பிறந்தநாளையொட்டி, ‘நான் ரெடி’ என்று தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடலை மையப்படுத்தி சில சர்ச்சைகள் வெடித்த போதிலும், ஏராளமான ரசிகர்கள் சமூக ஊடகங்கள் வழி இப்பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில், இப்பாடல் ஐம்பது மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக லியோ படக்குழு தெரிவித்துள்ளது. இதற்காகச் சிறப்பு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்