தனது 25ஆவது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி உள்ளார் இளம் நாயகி அதிதி சங்கர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.
வெள்ளை நிற உடையில் அவர் அழகுச் சிலைபோல் காட்சியளிப்பதாக ரசிகர்களும் திரையுலகத்தினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அவர் பாடிய ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் அவர் ஊடகத்தில் பணியாற்றும் சென்னைப் பெண்ணாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“இந்த ஆண்டு எனக்கு மறக்க இயலாத அனுபவங்களைத் தந்து வருகிறது. எனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினேன்,” என்கிறார் அதிதி சங்கர்.
மருத்துவப் படிப்பை முடித்துள்ள அதிதி, சினிமா, நடிப்பு மீதான ஆர்வத்தால் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.