நடிகை சாய் பல்லவி அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள அவர், தனது பயணம் அருமையான அனுபவங்களைத் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘எஸ்கே21’ படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
குளிரில் இருந்து பாதுகாக்க, தலையில் முக்காடு போட்ட படியும் ஸ்வெட்டர் அணிந்த படியும் காணப்படும் புகைப்படங்களில் அவர் அழகாக இருப்பதாக ரசிகர்கள் பின்னூட்டமிட்டுள்ளனர்.

