திரைத்துளிகள்

திரைத்துளிகள்

2 mins read
85613b0b-abca-4b14-8a4c-a769cf7c6440
ஐஸ்வர்யா ராஜேஷ். - படம்: ஊடகம்
multi-img1 of 3

[ο]‘மாமன்னன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வடிவேலுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

‘லைப் இஸ் பியூட்டிபுல்’ என்ற இத்தாலியன் படத்தை மறுபதிப்பு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். அதில் தம்மை நாயகனாக நடிக்க வைக்க மாரி செல்வராஜ் விரும்புவதாக பேட்டி ஒன்றில் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.

“அந்த இத்தாலிய மொழிப் படத்தை நானும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மாரி செல்வராஜ் மீண்டும் திரையில் என்னை வித்தியாசமான கோணத்தில் தோன்ற வைப்பார் என நம்புகிறேன்,” என்கிறார் வடிவேலு.

‘மாமன்னன்’ படம் வசூலில் அசத்தி வருகிறது. இப்படத்தில் வடிவேலுவின் நடிப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர். எனவே மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்கி உள்ளார்.

[ο]முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கத் தயாராக இருந்தாலும் யாரும் தனக்கு வாய்ப்பு தருவதில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் முடங்கிக்கிடக்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் எந்தக் கட்டத்திலும் நம்பிக்கை இழக்கவில்லை. அதனால்தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தன,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதுவரை நாயகியை முன்னிலைப்படுத்தும் பதினைந்து படங்களில் நடித்திருப்பதாகக் குறிப்பிடுபவர், முன்னணி கதாநாயகர்கள் ஏன் தனக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை என ஆதங்கப்படுகிறார்.

“இதை நினைத்து நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில், எனக்கென ஒரு ரசிகர் வட்டம் உள்ளது. அதுவே எனக்குப் போதுமானது,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

[ο]தனது 25ஆவது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி உள்ளார் இளம் நாயகி அதிதி சங்கர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் அவர் அழகுச் சிலைபோல் காட்சியளிப்பதாக ரசிகர்களும் திரையுலகத்தினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அவர் பாடிய ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் அவர் ஊடகத்தில் பணியாற்றும் சென்னைப் பெண்ணாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“இந்த ஆண்டு எனக்கு மறக்க இயலாத அனுபவங் களைத் தந்து வருகிறது. எனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினேன்,” என்கிறார் அதிதி சங்கர்.

மருத்துவப் படிப்பை முடித்துள்ள அதிதி, சினிமா, நடிப்பு மீதான ஆர்வத்தால் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்