ஆர்.ஆர்.ஆர். 2ஆம் பாகம்

1 mins read
78933dff-2a80-453f-8e64-a12f5b4a9c55
ராஜமவுலியுடன் விஜயேந்திர பிரசாத். - படம்: இணையம்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு... நாட்டு...’ பாடல் ‘ஆஸ்கார்’ விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்று உலக அளவில் கவனம் பெற்றது.

இந்தப் படத்தின் 2ஆம் பாகத்துக்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக, அப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும், ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் 2ஆம் பாகம் படத்திலும் நடிப்பார்கள். ஹாலிவுட் தரத்தில் இந்த படம் இருக்கும். முன்னணி ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராஜமவுலி அல்லது அவரின் மேற்பார்வையில் வேறு யாராவது இயக்கலாம் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்