கமல் கதையை வினோத் இயக்குகிறார்

1 mins read
9573095c-46a2-4948-bae7-6686b5ddce42
 கமல்ஹாசன், ஹெச்.வினோத் - படம்: இணையம்

இந்தியன்-2க்குப் பிறகு கமல்ஹாசன், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “கமல்ஹாசன் சொன்ன கதையே நன்றாக இருந்ததால், நான் திரைக்கதை மட்டும் எழுதி இயக்கவுள்ளேன்,” என்று வினோத் கூறியுள்ளார்.

கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு காணொளியை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் அண்மையில் வெளியிட்டிருந்தது.

‘ரைஸ் டூ ரூல்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதை உறுதிசெய்கின்றன. முன்னதாக, விவசாய சங்க நிர்வாகிகளுடன் கமல் மற்றும் வினோத் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் இப்படம் விவசாயிகளின் பிரச்சினையைக் கொண்டு உருவாக இருக்கிறது என தகவல் பரவியது.

ஆனால் இது விவசாயிகள் தொடர்பான படமல்ல என்று வினோத் மறுத்துள்ளார்.

படம் உருவாகும் முன்னரே, படத்தின் டிஜிட்டல் உரிமையை, முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ.125 கோடிக்கு வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி