அதிகரிக்கும் திரையரங்கு கட்டணம்
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
திரையரங்குகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக விதிகளை தளர்த்த கோரி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தினார்கள்.
மேலும் திரையரங்குகளில் படங்கள் வெளியான 8 வாரத்துக்கு பின்னரே ‘ஓ.டி.டி.’யில் படங்களை வெளியிட வேண்டும் என்றும் டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. கட்டணமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மொட்டைத் தலையுடன் ஷாருக்கான்
‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானும் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுக்கு நடுவே ராணுவ அதிகாரியாக அறிமுகமாகிறார் ஷாருக்கான். மற்றொரு காட்சியில் ஜேம்ஸ் பாண்ட் வில்லன்போல முகத்தில் முகமூடியுடனும் உடல் முழுவதும் துணியை சுற்றி கட்டுப்போட்டு காணப்படுகிறார். அடுத்தடுத்து காட்டப்படும் சண்டைக் காட்சிகள் ‘பதான்’ படத்தை நினைவூட்டுகின்றன. இறுதியில் தலையில் கட்டுடன் மெட்ரோ ரயிலுக்குள் நுழையும் ஷாருக், கட்டை அவிழ்த்து மொட்டைத் தலையுடன் காட்சி கொடுக்கிறார்.
பொன்னியின் செல்வனில் ஒற்றன் வேடம்
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். பாடகரான இவர், தனுஷின் ‘மாரி’ படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் சில படங்களில் நடித்த இவர், மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்ததாகவும் அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறியிருந்தார்.
அதுபற்றி அவர் கூறுகையில், “இந்தப் படத்தில் மதுராந்தகனின் (ரஹ்மான்) ஒற்றன் கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆதித்த கரிகாலனுடன் (விக்ரம்) சென்று தகவல்களைச் சேகரிக்கும் வேடம்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். திரிஷாவுடனும் எனக்கு காட்சிகள் இருந்தன. ஆனால், அனைத்தையும் எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள். இதில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நல்ல வாய்ப்பாகவே நினைக்கிறேன். இந்தப் படத்தின் 2 பாகங்களையும் பார்த்தேன். படத்தில் அவசியமான காட்சிகள் மட்டுமே இருந்தன. எனது காட்சிகள் இல்லாதபோதும் சிறப்பாகவே இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் திரையரங்கு கட்டணம்
மிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
திரையரங்குகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக விதிகளை தளர்த்த கோரி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தினார்கள்.
மேலும் திரையரங்குகளில் படங்கள் வெளியான 8 வாரத்துக்கு பின்னரே ‘ஓ.டி.டி.’யில் படங்களை வெளியிட வேண்டும் என்றும் டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. கட்டணமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் ‘கிடா’
அறிமுக இயக்கு’ர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கிடா’.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும் அவனது தாத்தாவிற்கும் ஓர் ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள ‘கிடா’ திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
அண்மையில் இந்தியன் பனோரமா மற்றும் சென்னை அனைத்துலக திரைப்பட விழாவில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கிடா திரைப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடக்கும் மெல்போர்னின் 14வது இந்திய திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘கிடா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களை பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
கார்த்திக் தங்கவேலுடன் இணையும் சிம்பு
சிம்பு, கார்த்திக் தங்கவேல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். ஜெயம் ரவி, ராசி கன்னா நடித்த ‘அடங்க மறு’ படத்தை இயக்கியவர் கார்த்திக் தங்கவேல். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் 49வது படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என தெரிகிறது. இந்தப் படம் சண்டைக்கு முக்கியத்துவம் தரும் வடசென்னை பகுதி கதையாக உருவாகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

