தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘லால் சலாம்’ குழுவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி

1 mins read
bd1a6298-2076-4191-b453-6bc8e628043b
‘லால் சலாம்’ படக்குழுவினருடன் ரஜினி. - படம்: ஊடகம்

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பின்னணி இசை, வசனப் பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் தொடங்கி உள்ளன.

இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது. ரஜினி மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ரஜினி கேட்டுக்கொண்டதை அடுத்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் சிறு வேடத்தில் நடித்துள்ளாராம். இந்தி நடிகர் அமிதாப் பச்சனும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

கதை நாயகர்களாக விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் நடித்துள்ளனர்.

பிரபல லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

மூன்று கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா. இந்நிலையில், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாகப் படமாக்கி உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் படக்குழுவினருடன் சிரித்தபடி காட்சியளிக்கிறார் ரஜினி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்