இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குராகப் பணியாற்றிய அசோக் குமார் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளார் ஆர்ஜே பாலாஜி.
முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சிங்கப்பாதை’ எனும் படத்தை அசோக் குமார் இயக்குவதாக இருந்தது. இதனை கேஜிஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் சிவகார்த்திகேயன் திடீரென விலகியதால் படத்தயாரிப்பு முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை.
இந்நிலையில், ஆர்ஜே பாலாஜியை அணுகியுள்ளார் அசோக்குமார். அவர் சொன்ன கதை பிடித்துப்போனதால் உடனடியாக கால்ஷீட் ஒதுக்கினாராம் ஆர்ஜே பாலாஜி.

