உலகளவில் முன்னணியில் உள்ள தொலைபேசி நிறுவனத்தின் மீது நடிகை ஆத்மிகா வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த நிறுவனத்திடம் தவணை முறையில் விலையுயர்ந்த கைப்பேசி ஒன்றை வாங்கியுள்ளார் ஆத்மிகா. அதற்கான தவணைத் தொகையை முறையாகச் செலுத்தி வந்தபோதிலும், தனது வங்கிக் கணக்கில் இருந்து அந்நிறுவனம் கூடுதலாக பணம் எடுத்து வந்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் ஆத்மிகா.
இந்த விவரங்களை அவர் தமது சமூக ஊடகப் பதிவில் விரிவாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து, “நீங்கள் துணிச்சலான விவரமான பெண்,” என்று ரசிகர்கள் பலர் பின்னூட்டமிட்டுள்ளனர்.


