நடிகர் துருவ் விக்ரம் புதுப்படம் ஒன்றில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
கதையைக் கேட்டு உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்ட துருவ், ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் ரகுமான் இசையமைப்பதை அறிந்ததும் கேட்ட தொகையைக் குறைத்துக் கொண்டதாகத் தகவல். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
துருவ் விக்ரம் இதுவரை நடித்த படங்கள் வசூல் ரீதியில் பெரிதாகச் சாதிக்கவில்லை. இந்நிலையில் அவர் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பது விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

