தர்ஷா: குறைகள் காணும் உலகில் நிறைகள் தெரிவதில்லை

1 mins read
302f7875-17c3-47f0-8013-dfbf31a8dfbf
தர்ஷா குப்தா. - படம்: ஊடகம்

சுற்றி இருப்பவர்கள் குறைகளை மட்டும் கண்டுபிடிப்பவர்களாக உள்ளனர் என்கிறார் தர்ஷா குப்தா.

சின்னத்திரை தொடர்களில் அறிமுகமாகி, இப்போது திரைப்படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் அண்மைய பதிவில், “குறைகள் காணும் உலகில் நிறைகள் தெரிவதில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார் தர்ஷா.

இந்தப் பதிவை கேலி செய்யும் வகையில் ஒரு ரசிகர், “நிறைகள் தெரியாவிட்டாலும் கவர்ச்சி மட்டும் நிறையவே தெரிகிறது,” என்று பின்னூட்டமிட்டுள்ளார்.

ஆனால் தர்ஷா இது குறித்து கவலைப்படவில்லை. மேலும் சில கவர்ச்சிப் படங்களை பகிர்ந்துள்ளார். இது விளம்பர முயற்சி என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.

‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தர்ஷா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்