பாடகராக மாறிய நடிகர் விஷால்

பாடகராக மாறிய நடிகர் விஷால்

1 mins read
83cab3a9-2e5c-4715-8a71-3c830c8bfec7
பாடல் பதிவில் விஷால். - படம்: ஊடகம்

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க நிர்வாகி எனப் பன்முகங்களைக் கொண்ட விஷால், இப்போது பாடகராகவும் முத்திரை பதிக்க உள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ படத்தில் நாயகனாக நடித்து வரும் விஷால், அப்படத்துக்காக ஒரு பாடலும் பாடியுள்ளார்.

ஏற்கெனவே இப்படத்துக்காக டி.ராஜேந்தர் ஒரு பாடலைப் பாடிய தகவல் அண்மையில் வெளியானது.

’மதகஜ ராஜா’ என்ற திரைப்படத்திலும் விஜய் ஆண்டனி இசையில் விஷால் ஒரு பாடலைப் பாடியிருந்தார். ஆனால் அப்படம் சில காரணங்களால் இதுவரை வெளியாகவில்லை.

’மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்